/உள்ளூர் செய்திகள்/மதுரை/மேலூரில் வங்கிகள் பற்றாக்குறை கிளைகள் திறக்க தீவிரம்மேலூரில் வங்கிகள் பற்றாக்குறை கிளைகள் திறக்க தீவிரம்
மேலூரில் வங்கிகள் பற்றாக்குறை கிளைகள் திறக்க தீவிரம்
மேலூரில் வங்கிகள் பற்றாக்குறை கிளைகள் திறக்க தீவிரம்
மேலூரில் வங்கிகள் பற்றாக்குறை கிளைகள் திறக்க தீவிரம்
ADDED : ஜூன் 04, 2010 02:41 AM
மதுரை:மேலூர் தொழில்வளம் மிகுந்த பகுதியாக இருந்தாலும், வங்கிக் கிளைகள் குறைவாக இருப்பதால், பணப்பரிமாற்றம் செய்வது சிரமமாக உள்ளது.
எனவே இப்பகுதியில் தேசிய வங்கிகளின் கிளைகள் திறக்க ஆர்வமாக உள்ளன.மேலூரில் தற்போது ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., மற்றும் தனலட்சுமி வங்கிகளின் கிளைகள் செயல்படு கின்றன.
ஸ்டேட் வங்கியில் அதிகளவு இடநெரிசல் இருப்பதால், வாடிக்கையாளர்கள் சிரமப்படுகின்றனர். மேலூருக்கு அடுத்து 25 கிலோமீட்டர் தொலைவு வரை (சிவகங்கை) வங்கிகளே இல்லை. மேலூரிலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோட்டநத்தம்பட்டி பகுதியில் கிளை அமைத்தால், விவசாயக்கடன்கள் அதிகளவில் பெறுவதற்கு வாய்ப்புள்ளது.
கோமதிபுரம் பகுதியில் கிளை அமைத்தால் வீட்டுக்கடன்கள் அதிகமாக பெறுவார்கள். எனவே வங்கிகள் இதுகுறித்து ஆலோசனை செய்து வருகின்றன. மூன்று இடங்களிலும் வங்கிக் கிளைகள் அமைத்தால், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் என இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.